முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மல்யுத்தம்: சோனம் மாலிக் தோல்வி

செவ்வாய்க்கிழமை, 3 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

ஒலிம்பிக் போட்டியின் 12-வது நாளான நேற்று மகளிர் மல்யுத்த போட்டியில் (62 கிலோ எடை பிரிவு) இந்தியாவின் சோனம் மாலிக் மற்றும் மங்கோலியா நாட்டின் போலர்துயா குரெல்கூ ஆகியோர் விளையாடினர்.

இந்த போட்டியில் சோனம் தோல்வி அடைந்துள்ளார்.  எனினும் அவருக்கு போட்டியில் தொடர்ந்து விளையாட மற்றொரு வாய்ப்பு உள்ளது.

ஈட்டி எறிதல்: அன்னு ராணி தோல்வி

மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி (வயது 28) முதல் முயற்சியில் 50.35 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்துள்ளார்.  இதனால் 9வது இடம் பிடித்த அவர், 2வது முயற்சியில் 53.19 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்துள்ளார்.எனினும், 2வது முயற்சியில் பலரும் இந்த இலக்கை கடந்திருந்தனர்.  

இதனால், 14வது இடத்திற்கு ராணி தள்ளப்பட்டார். அதன்பின் 3வது மற்றும் இறுதி முயற்சியில் 54.04 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 14வது இடம் பெற்றார்.  முதல் 12 இடங்களில் வருபவர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வாக கூடிய சூழலில், ராணி தோல்வி அடைந்து இறுதி சுற்றுக்கு தேர்வாகாமல் வெளியேறி உள்ளார். 

திரைப்படமாகும் மீராபாயின் வாழ்க்கை 

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்தவர் மீராபாய் சானுவின் வாழ்க்கை பயணம் படமாகிறது. மீராபாய் சானுவின் மொழியான மணிப்பூரி மொழியிலேயே அவரின் பயோபிக் திரைப்படம் தயாராக உள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் மீராபாய் தரப்புக்கும், இம்பால் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சியூட்டி பிலிம்ஸ் இடையே கையெழுத்து ஆகிருக்கிறது.

படம், மணிப்பூரி மொழியில் எடுக்கப்பட்டாலும், ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் கூறுகையில், இந்தப் படம் மீராபாயின் குழந்தை பருவ நிகழ்வுகள் முதல் டோக்கியோ ஒலிம்பிக் வரையிலான அவரின் பயணத்தை எடுத்துச் சொல்லும். நானே இதற்கு கதை எழுதி வருகிறேன்" என்றார்.

குதிரையேற்றம்: மிர்ஸா தோல்வி

குதிரையேற்றத்தில் தனிநபர் ஜம்பிங் பிரிவில் இந்தியாவின் ஃபௌவாத் மிர்ஸா இறுதிச்சுற்றில் 23-வது இடம் பிடித்தார். முன்னதாக, ஜம்பிங் பிரிவின் தகுதிச்சுற்றில் இரு தடுப்புகளை தட்டி விட்டதால் 8 பெனால்டி புள்ளிகள் பெற்ற ஃபௌவாத் மிர்ஸா, மொத்தமாக 47.2 பெனால்டி புள்ளிகளுடன் 25-வது இடம் பிடித்தார். 

இப்பிரிவில் முதல் 25 இடம் பிடிப்பவர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவர். அதில் மிர்ஸா மொத்தமாக 59.60 பெனால்டி புள்ளிகளுடன் 23-ஆவது இடம் பிடித்தார்.ஒலிம்பிக் குதிரையேற்றத்தில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை மிர்ஸா பெற்றுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து