முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் ' சீனா ' தொடர்ந்து முதலிடம்

புதன்கிழமை, 4 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ: ஜப்பான் 3-வது... சீனா 32 தங்கப் பதக்கம், 21 வெள்ளி, 16 வெண்கலத்துடன் 69 பதக்கங்களுடன் தற்போது வரை முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் அமெரிக்கா 24 தங்கம், 28 வெள்ளி, 21வெண்கலம் மொத்தமாக 73 பதக்கங்களை இதுவரை பெற்றுள்ளது. ஜப்பான் 19 தங்கம் 6 வெள்ளி, 11 வெண்கலம் ஆகியவற்றுடன் 36 பதக்கங்களுடன் 3ம் இடம் வகிக்கிறது.

பிரட்டன் 6-வது...

14 தங்கம், 4 வெள்ளி, 16 வெண்கலம் ஆகியவற்றுடன் மொத்தம் 34 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 4வது இடம் வகிக்கிறது. ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி 5ம் இடத்தில் மொத்தம் 52 பதக்கங்களுடன் உள்ளது, இது 13 தங்கம், 21 வெள்ளி, 18 வெண்கலத்துடன் உள்ளது. 6வது இடத்தில் கிரேட் பிரிட்டன் 13 தங்கம், 17வெள்ளி, 13 வெண்கலம் 43 பதக்கங்களுடன் உள்ளது.

தென் கொரியா 10-வது...

ஜெர்மனி மொத்தமாக 30 பதக்கம் பெற்றுள்ளது இதில் 8 தங்கம், 8 வெள்ளி, 14 வெண்கலம் என்று 7ம் இடத்தில் உள்ளது. 8வது இடத்தில் பிரான்ஸ் 6 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலத்துடன் மொத்தம் 24 பதக்கம் பெற்றுள்ளது. 9வது இடத்தில் நெதர்லாந்து 6-8-7 என்று 21 பதக்கங்களுடன் உள்ளது. 10வது இடத்தில் கொரியா 6-4-9என்று 19 பதக்கங்களுடன் உள்ளது.இந்தியா 1 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 2 பதக்கங்களுடன் 64-ம் இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து