முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மல்யுத்தம்: தீபக் புனியா தோல்வி

புதன்கிழமை, 4 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஆடவர் மல்யுத்தம் அரையிறுதிச்சுற்றில் 87 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா, அமெரிக்காவின் டேவிட் டெய்லரை எதிர்கொண்டார். 

டேவிட் டெய்லர் மிக எளிதாக 10-0 என்கிற புள்ளிக்கணக்கில் தீபக் புனியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தீபக் புனியா போட்டியிடவுள்ளார். 

_________

மல்யுத்தம்: அன்சு மாலிக் தோல்வி

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. நேற்று காலை  மல்யுத்தம் மகளிருக்கான  57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அன்சு மாலிக் தோல்வி அடைந்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அன்சு மாலிக் 2-8 என்ற கணக்கில் பெலாரஸ் வீரங்கனையிடம் தோல்வி அடைந்தார்.

___________

ஈட்டி எறிதல்: சிவ்பால் சிங் தோல்வி

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் குரூப் பி பிரிவில் இந்தியா சார்பில் ஷிவ்பால் சிங் கலந்து கொண்டார்.  இவர் தனது முதல் வாய்ப்பில் 76.40 மீட்டரும், இரண்டாவது வாய்ப்பில் 74.80 மீட்டரும், மூன்றாவது வாய்ப்பில் 74.81 மீட்டரும் எறிந்தார். இதனால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.

_____________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து