முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஹாக்கி வீரர்கள் 8 பேருக்கு தலா ரூ.1 கோடி பரிசு - பஞ்சாப் அரசு

வியாழக்கிழமை, 5 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சண்டிகர்: இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 8 வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

8 வீரர்கள் இடம்... 

ஒலிம்பிக் ஹாக்கியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்று இந்திய ஹாக்கி அணி புதிய வரலாறு படைத்தது. வெண்கல வென்ற இந்திய ஹாக்கி அணியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கேப்டன் மன்பிரீத்சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் பால்சிங், ஹர்திக்சிங், ‌ஷம்ஷெர்சிங், தில்பிரீத்சிங், குர்ஜந்த்சிங், மன்தீப்சிங் ஆகிய 8 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

போட்டியை ரசித்த....

இந்தியா-ஜெர்மனி அணிகளுக்கு இடையே இன்று டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி பிரிவில் நடைபெற்ற த்ரில்லிங்கான வெண்கலப் பதக்கப் போட்டியை பிரதமர் மோடி கடைசி வரை கண்டு களித்தார். இந்தியா ஜெர்மனியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்று வெண்கலப்பதகக்த்தை வென்றது.

யோகா பயிற்சி...

இந்தப் போட்டியை ரசித்த கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களில் பிரதமர் மோடியும் ஒருவர், இவர் இதற்காக யோகா பயிற்சியையும் நேற்று ஒத்தி வைத்தார். காலை 7 மணிக்கே இந்தப் போட்டி நடைபெற்றதால் பிரதமரின் யோகா நேரத்தில் இது அமைந்தது, ஆனால் யோகா பயிற்சியை துறந்து போட்டியை ரசித்து மகிழ்ந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து