முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பாக விளையாடி அனைவரின் நெஞ்சங்களிலும் இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் இடம் பிடித்துள்ளனர்: ஜனாதிபதி

வெள்ளிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

இந்திய மகளிர் ஹாக்கி அணி, சிறப்பாக விளையாடி அனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்துள்ளனர் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.  இதில், நேற்று நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடி இங்கிலாந்து அணியிடம் 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது. 

இந்தியா 3 கோல்கள் அடித்த நிலையில், இங்கிலாந்து 4 கோல் அடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இப்போட்டியில் முதல் பாதியில் இந்தியா முன்னிலை பெற்று வந்த நிலையில், இரண்டாம் பாதியில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்திய மகளிர் ஹாக்கி அணியினர், சிறப்பாக விளையாடி அனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்துள்ளனர் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய மகளிர் ஹாக்கி அணி களத்தில் சிறந்து விளங்கியது. இந்திய மகளிர் ஹாக்கி அணி, சிறப்பாக விளையாடி அனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்துள்ளனர். உங்களை நினைத்து நாங்கள் பெறுமை கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து