முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூகுள் குட்டப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்

வெள்ளிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷனும், லொஸ்லியாவும் முதன் முறையாக இணைந்து நடிக்கும் ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை  நடிகர் சூர்யா வெளியிட்டார். இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் சொந்த பட நிறுவனமான ஆர்.கே. செல்லுலாயிட்ஸ்  தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படம் ‘தெனாலி’, மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இருபது ஆண்டுகளுக்கு பிறகு, இந்நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’.  யோகி பாபு, பூவையர், மனோபாலா, மாரிமுத்து, ‘பிளாக்’ பாண்டி, ‘பிராங்க் ஸ்டார்’ ராகுல், நடிகை பவித்ரா லோகேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநர்களாக சபரிகிரீசன் மற்றும் குரு சரவணன் என்ற இரட்டை இயக்குனர்கள் அறிமுகமாகிறார்கள்.

இவர்கள் இருவரும் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமாரிடம் உதவியாளர்களாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். ஆர்வி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, பிரவீண் ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

படத்தைப் பற்றி இரட்டை இயக்குனர்கள் பேசுகையில்,'மலையாளத்தில் ‘ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன்’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கிராபிக்ஸ் காட்சிகளுடன் சேர்த்து திரைக்கதையை சுவராசியப்படுத்தியிருக்கிறோம் என்றனர் இந்த இரட்டை இயக்குனர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து