முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரையரங்க டிக்கட்டுகள் கணினி மயமாக்கப்பட வேண்டும்

வெள்ளிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

முழுக்க புது முகங்களை வைத்து வித்யாசமான கிரைம் த்திர்லர் படம் ஒன்றை தயாரிக்கப்போவதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் பேசிய திரு. ராதாகிருஷ்ணன், சினிமா தயாரிப்பு தொழில் கடந்த பத்தாண்டுகளாகவே கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுவருவதால்  இதனை தடுக்கும் விதமாக கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார். குறிப்பாக, திரையரங்குகளில் நுழைவுச்சீட்டு விற்பனை முழுக்க கணினி மயமாக்கப்பட்டு வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும், இணையத்தில் நுழைவுச்சீட்டு பதிவு செய்யும்போது கிடைக்கிற சேவைத் தொகையில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு வேண்டும்,

திரைப்படங்களின்  இடைவேளையில் போடப்படும் விளம்பரங்களில் கிடைக்கும் வருவாயில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு வேண்டும், க்யூப், UFO போன்ற டிஜிட்டல் நிறுவனங்களுக்கு விஎஃப்எஃப் எனப்படும் ஒளிபரப்புக்கருவிக்கான  வாடகைக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், திரையரங்கு உரிமையாளர்கள் சிண்டிகேட் எனப்படும் மறைமுகக்கூட்டணி வைக்கக்கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும்,  திரையரங்குகளில் விற்கப்படும் நுழைவுச்சீட்டுகளின் அடிப்படையில் அரசாங்கத்துக்கு வரி வருவாய் கிடைக்கிறது. ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் முறையான கணக்கு கொடுக்காததால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் நானூறு முதல் சுமார் ஆயிரம் கோடிவரை அரசாங்கத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இந்த வருவாய் உரிய முறையில் அரசாங்கத்துக்குப் போய்ச்சேர்ந்தால், சிறிய பட்ஜெட் படங்களுக்கு மானியம் உள்ளிட்ட பல சலுகைகளை உரிமையுடன் கேட்டுப் பெற முடியும்.  எங்கள் கோரிக்கையை திரையரங்கு உரிமையாளர்களை ஏற்க வலியுறுத்தி அரசாங்கத்திடம் முறையிடவுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து