முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹுசைன் தயாரிக்கும "முதல் மனிதன் "

வெள்ளிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

உலக நாடுகளில் தற்போது நடைபெற்று வரும் சாதி மத சண்டைகள் வெறுப்பு அரசியல் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் இந்த முதல் மனிதன் படம். பூ உலகில் முதன் முதலாக தோன்றிய மனிதன் என்ன சாதி? என்ன மதம் என்று  யாரால் நிரூபிக்கக்கூடும்? சாதியையும் மதத்தையும் உருவாக்கியது யார்? அனைவரும் மனித நேயத்துடன் ஏற்றத் தாழ்வு இல்லாமல் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை சொல்லும் படம் தான் இந்த  "முதல் மனிதன்" எனக் கூறுகிறார் இயக்குனர் ராஜராஜதுரை..

இதன்  படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளது. நாயகனாக பாசித் நடிக்க நாயகிகளாக  "சான்ராரோஸும்  ரோஷினியும் நடிக்கிறார்கள்.  முக்கியக் கதாபாத்திரத்தில் கௌசல்யா, நடிக்கிறார்.

மேலும் ஆடுகளம் நரேன், மாரிமுத்து, கராத்தே ராஜா, சூப்பர் குட் லட்சுமணன், போண்டாமணி, கிரேன் மனோகர், கொட்டாச்சி, கிங்காங், கவிதாலயா மகாலட்சுமி, கம்பம் மீனா, ஆகியோர்  நடிக்கிறார்கள்.

வைரமுத்து பாடல் எழுத, தாஜ்நூர் இசை அமைக்கும் இப்படத்திற்கு  கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் ராஜராஜதுரை. N.M.H இன்டர்நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் N.M.ஹுசைன் தயாரிக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து