முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மல்யத்தம் அரையிறுதியில் தோல்வி: வெண்கலத்திற்கான போட்டியில் ' பஜ்ரங் பூனியா ' இன்று மோதல்

வெள்ளிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா அரையிறுதியில் தோல்வி அடைந்தார். இதை அடுத்து இன்று நடைபெறும் வெண்கலத்திற்கான போட்டியில் அவர் தவ்லத் நியாஸ்பகோவிடம் மோதுகிறார்.

65 கிலோ பிரிவில்...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  இதில், ஆடவர் ஃபிரீஸ்டைல் மல்யுத்த போட்டியின் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா மற்றும் அஜர்பைஜானின் ஹாஜி அலியேவ் அரையிறுதியில் விளையாடினர். 

காலிறுதியில்...

நேற்று நடைபெற்ற ஆடவர் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவில் முதல் ஆட்டத்தில் கிர்கிஸ்தானைச் சேர்ந்த எர்னாசரையும் காலிறுதியில் ஈரானின் மொர்டசாவையும் எதிர்கொண்டார் பஜ்ரங் புனியா. இரு ஆட்டங்களிலும் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.

அரையிறுதியில்...

அரையிறுதியில் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மூன்று முறை உலக சாம்பியனான அஜர்பைஜானைச் சேர்ந்த ஹாஜி அலியேவுடன் மோதினார் பஜ்ரங் புனியா. ஆரம்பத்தில் முதல் புள்ளியை எடுத்தார் பஜ்ரங் புனியா. அதன்பிறகு ஹாஜி அலியேவ், ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி புள்ளிகளைச் சேர்த்தார். 

11-5 கணக்கில்... 

முதல் பாதியில் 4-1 என முன்னிலை பெற்றார். இதன்பிறகு பஜ்ரங் புனியா போராடி சில புள்ளிகளை எடுத்தார். எனினும் இறுதியில் 11-5 என்கிற புள்ளிக்கணக்கில் பஜ்ரங் புனியாவை ஹாஜி அலியேவ் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதனையடுத்து பஜ்ரங் புனியாவுக்கு வெள்ளி வாய்ப்பு முடிந்து தற்போது வெண்கலச் சுற்றில் பஜ்ரங் புனியா தவ்லத் நியாஸ்பகோவிடம் இன்று மோதுகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து