முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரபூர்வ கணக்கிற்கான அடையாளத்தை இழந்த டோனியின் ' ட்விட்டர் '

வெள்ளிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

தொடர்ந்து ட்விட்களை பதிவிடாத டோனியின் ட்விட்டர் பக்கம், அதிகாரபூர்வ கணக்கிற்கான அடையாளத்தை இழந்துள்ளது. இதனால்தான் டோனியின் ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.

டோனி ஓய்வு...

சி.எஸ்.கே அணி கேப்டனான டோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த வருடம் ஓய்வு பெற்றார். இந்திய அணிக்காக 90 டெஸ்ட், 350 ஒருநாள், 98 டி-20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

ப்ளூ டிக் நீக்கம்...

ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு ப்ளூ டிக் வழங்கப்படும். அதுபோல டோனியின் ட்விட்டர் கணக்குக்கும் ப்ளூ டிக் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டோனியின் ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியான ரசிகர்கள் பலரும் ட்விட்டரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்கள். 

இரு ட்வீட்கள்...

தனது ட்விட்டர் கணக்கில் கடைசியாக ஜனவரி 8 அன்று ட்வீட் வெளியிட்டுள்ளார் டோனி. அதற்குப் பிறகு ஒரு ட்வீட்டும் வெளியிடாததால் இந்தக் காரணத்துக்காக ப்ளூ டிக்கை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியிருக்க வாய்ப்புள்ளது. டோனியின் கடைசி இரு ட்வீட்கள் 2021 ஜனவரி 8, 2020 செப்டம்பர் 10 ஆகிய தேதிகளில் வெளிவந்துள்ளன.

ட்விட்டர் விளக்கம்...

ப்ளூ டிக் வழங்குவது பற்றி ட்விட்டரின் விளக்கம் அளித்துள்ளது. அதிகாரபூர்வமான கணக்கு என்பதை மக்கள் அறிந்து கொள்வதற்காக ப்ளூ டிக் வழங்கப்படுகிறது. ப்ளூ டிக் கிடைப்பதற்கு உங்களுடைய கணக்கு தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்க வேண்டும், குறிப்பிடத்தக்க, அதிகாரபூர்வமானதாக இருக்க வேண்டும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து