முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியர்களை பெருமைப்பட வைத்துள்ளோம் - மரிஜ்னே

வெள்ளிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

இந்தியர்களை பெருமைப்பட வைத்துள்ளோம் என்று 

பெண்கள் ஹாக்கி அணி பயிற்சியாளர் ஸ்ஜேர்ட் மரிஜ்னே நெகிழ்ச்சிபட தெரிவித்துள்ளார்.

போராடி தோல்வி...

பரபரப்பாக நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பெண்கள் ஹாக்கி அணி நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பெண்கள் ஹாக்கி அணி போராடி தோல்வி அடைந்துள்ளது. பரபரப்பான போட்டியில், 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி வாய்ப்பை பிரிட்டனிடம் தவறவிட்டுள்ளது.

பயிற்சியாளர் நெகிழ்ச்சி...

இதையடுத்து, வீரர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், பதக்கத்தை விட பெரிதான ஒன்றை வென்றிருக்கிறோம் என பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஸ்ஜேர்ட் மரிஜ்னே நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை வையுங்கள்...

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "நாங்கள் பதக்கத்தை வெல்லவில்லை. அதை விட பெரிதான ஒன்றை வென்றிருக்கிறோம். இந்தியர்களை பெருமைப்பட வைத்துள்ளோம். கடின உழைப்பை மேற்கொண்டால் கனவு நிறைவேறும் என லட்சக்கணக்கான சிறுமிகளை உத்வேகப் படுத்தியுள்ளோம். அதில், நம்பிக்கை வையுங்கள். ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து