முக்கிய செய்திகள்

நடிகர் அமிதாப்பச்சன் வீடு மற்றும் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: 2 பேரை கைது செய்தது மும்பை போலீஸ்

சனிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2021      சினிமா
Amitabh-Bachchan 2021 08 07

Source: provided

மும்பை : மும்பையில் உள்ள நடிகர் அமிதாப் பச்சன் வீட்டிற்கும் ரயில் நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பையில் உள்ள நான்கு இடங்களுக்கு பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இருவரை காவல்துறையின் குற்ற புலனாய்வு பிரிவு நேற்று கைது செய்துள்ளது. இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்,

நடிகர் அமிதாப் பச்சனின் பங்களா, மூன்று ரயில் நிலையங்களுக்கு அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.  பின்னர், பொய்யான வெடிகுண்டு மிரட்டல் என தெரியவந்தது. இது தொடர்பாக மும்பை காவல்துறையின் குற்றப் புலனாய்வு பிரிவு இருவரை கைது செய்துள்ளது. நேற்று முன்தினம் இரவு காவல்துறைக்கு வந்த பொய்யான வெடி குண்டு மிரட்டல் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தாதர், பைக்குல்லா, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையங்கள், அமிதா பச்சனின் வீடு ஆகியவற்றில் வெடி குண்டு வைக்கப்பட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் தெரிவித்தார்.  >இதையடுத்து, மும்பை காவல்துறை, ரயில்வே காவல்துறை, வெடி குண்டு நிபுணர்கள் ஆகியோர் அந்த நான்கு இடங்களுக்கு சென்று சோதனை நடத்தியதில் அது பொய்யான தகவல் என தெரிய வந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து