முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 16 நாட்களாக நடைபெற்ற 32 - வது ஒலிம்பிக் திருவிழா: இன்று மாலையுடன் நிறைவு

சனிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று மாலையுடன் நிறைவு பெற உள்ளது. பதக்கப்பட்டியலில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் டாப் 3 இடங்களில் உள்ளன.

இன்றுடன் நிறைவு...

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23-ம் தேதி மாலை கோலாகலமாக தொடங்கியது. கடந்த 23 நாட்கள் நடைபெற்ற போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி இன்று ரசிகர்கள் யாரும் இன்றி நடந்தது குறிப்பிடத்தக்கது.

11,000 போட்டியாளர்கள்...

மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்ட இப்போட்டியில் சுமார் 200 நாடுகளில் இருந்து, 11,000-க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கேற்றார்கள். இந்தியாவிலிருந்து சுமார் 125-க்கும் அதிகமான போட்டியாளர்கள் உள்பட 220 பேர் கொண்ட அணியை இந்தியா அனுப்பியது.

அதிக எண்ணிக்கை...

ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து 125 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்று இருந்தனர். ஒரு ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளின் அதிகபட்ச எண்ணிக்கை இது தான். 

18 விளையாட்டுகள்...

மொத்தம் 18 விளையாட்டுகளில் பதக்கத்துக்காக மல்லுகட்டிய இந்திய வீரர்கள் மகளிர் குத்துச்சண்டை, பேட்மிண்டன், பளுத் தூக்குதல், ஆடவர் ஹாக்கி, ஈட்டி எறிதல், மல்யுத்தம் உள்ளிட்ட விளையாட்டுகளில் மொத்தம் 7 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. 

முதல் முறை தங்கம்...

முதல் முறையாக ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் முதல் முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தியா இதுவரை 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் பதக்கங்களை வென்றுள்ளது. மேலும் நேற்றுடன் இந்தியாவிற்கான போட்டிகள் நிறைவடைந்தன. 

பஜ்ரங் பூனியா...

நேற்று கடைசி நாளில் மல்யுத்தத்தில் ண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் பஜ்ரங் பூனியா வெண்கலம் வென்றார். கோல்ப் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அதிதி  அசோக் 4ம் இடத்தை பிடித்து பதக்க வாய்ப்பை தவற விட்டார். இதுவரை இந்திய அணி ஒரு தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் உள்ளிட்ட 7 பதக்கங்களுடன் 47-வது இடத்தில் உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து