முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் ஆடவர் 4 x 400 தொடர் ஓட்டம்: இந்திய அணி 'ஆசிய சாதனை'

சனிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

ஒலிம்பிக் போட்டி தடகளத்தில் இந்திய அணியினர் ஆடவர்  4 x 400 மீ தொடர் ஓட்டத்தில் புதிய ஆசிய சாதனையை நிகழ்த்தினர். எனினும் அவர்களால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை.

குர்ப்ரீத் சிங்... 

ஆடவர் 50 கி.மீ நடை ஓட்ட பந்தயத்தில் பங்கேற்ற ஒரே இந்திய வீரரான குர்ப்ரீத் சிங் 35 கி.மீ தூரத்தைக் கடந்த போது, கால்பிடிப்பால் பாதிக்கப்பட்டு விலகினார். கடும் வெப்பம் நிலவிய சூழலில் 37 வயதான இந்திய ராணு வீரரான குர்ப்ரீத் 25 கி.மீ தூரத்தை இரண்டு மணிநேரத்தில் கடந்து, 48-வது இடத்தில் இருந்தார். எனினும் அவருக்கு கால்பிடிப்பு ஏற்பட்டதால் விலகி விட்டார்.

பிரியங்கா கோஸ்வாமி... 

போலந்தின் டேவிட் டோமலா தங்கமும், ஜெர்மனியின் ஜோனத்தான், கனடாவின் எவான் வெள்ளி, வெண்கலத்தை வென்றனர். மகளிர் 20 கி.மீ நடை ஓட்டத்தில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி 17-வது இடத்தையும், பாவனா ஜாட் 32-வது இடத்தையுமே பெற முடிந்தது. பாதி தூரம் வரை பிரியங்கா முன்னணியில் இருந்த நிலையில், இறுதியாக பந்தய தூரத்தை 1:32:35 மணி நேரத்தில் கடந்தார். பாவனா 1:37:38 மணி நேரத்தில் இலக்கை அடைந்தார். முதல் 8 கி.மீ தூரம் வரை முதலிடத்தில் இருந்த பிரியங்கா, இறுதியாக 17-ஆவது இடத்தையே பெற்றார்.

புதிய ஆசிய சாதனை...

ஆடவர் 4 x 400 மீ தொடர் ஓட்டம் 2-வது ஹீட்ஸ் நடைபெற்றது. இதில் ஆரோக்கிய ராஜீவ், நிர்மல் டாம், முகமது அனாஸ், அமோஜ் ஜேக்கப் ஆகியோர் அடங்கிய இந்திய அணியினர் 3:00:25 நிமிஷங்களில் பந்தய தூரத்தைக் கடந்து புதிய ஆசிய சாதனை படைத்தனர். ஒட்டுமொத்தமாக 9-ஆவது இடத்தையே இந்திய அணியால் பிடிக்க முடிந்தது. இதனால் இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து