முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடி அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க தடையால் பொதுமக்கள் ஏமாற்றம் : வெறிச்சோடிய கடற்கரைகள்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஆகஸ்ட் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா பரவல் காரணமாக ஆடி அமாவாசையன்று மக்கள் கூட அரசால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகினர். 

கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக நீர்நிலைகளில் திரள தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஆடி அமாவாசையையொட்டி பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் வெளியூர்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தடையை மீறி வருபவர்களை தடுத்து நிறுத்தவும் கண்காணிக்கவும், 13 சோதனை சாவடிகளில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். உள்ளூர் மக்கள் மட்டும் புரோகிதர்கள் இன்றி கடலில் குளித்து சென்றனர். 

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை வெறிச்சோடி காணப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட போலீசார் அம்மா மண்டபம் பகுதியில் குவிக்கப்பட்டு தர்ப்பணம் கொடுக்க வரும் பொதுமக்களை திருப்பி அனுப்பினர். இதேபோல் அய்யாளம்மன் படித்துறை, கீதாபுரம் படித்துறை, ஓடத்துறை படித்துறைகளிலும் போலீசார் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். 

ஆடி அமாவாசையையொட்டி மதுரை வைகையாற்றில் ஏராளமான பொதுமக்கள் தடையை மீறி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க குவிந்த நிலையில், போலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர். கல்பாலம், பேச்சியம்மன் படித்துறை ஆகிய வைகையாற்று பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஒரே நேரத்தில் திரளானோர் சமூக இடைவெளியின்றி குவிந்தனர். அங்கு சென்ற போலீசார் அனைவரையும் வெளியேற்றியதோடு, வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் வைகை கரையோர பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். 

இதே போல் சென்னையில் உள்ள முக்கிய அம்மன் கோயில்கள் வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக மயிலாப்பூர்  முண்டககண்ணியம்மன் கோவில் வாசல் அடைக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான பக்தர்கள் கோவிலின் வாசலில் நின்று சாமி கும்பிட்டு சென்றனர். குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.  முக்கடல் சங்கமம் , குழித்துறை தாமிரபரணி ஆறு, திற்பரப்பு அருவி உள்ளிட்ட நீர் நிலைகளிலும், திக்குறிச்சி மஹாதேவர்கோயில், குழித்துறை மகாதேவர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தடையை மீறி, சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். நேற்றிரவு முதலே  பக்தர்கள் குவிந்ததால் திருவள்ளூர் தேரடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.  

கொரோனா பரவல் காரணமாக சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு, கடந்த 6-ம் தேதி முதல் இன்று வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகையை தடுக்கும் விதமாக 200க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அதை தொடர்ந்து காவிரி ஆற்றுப் பகுதிகள், ராமேஸ்வரம், வேதாரண்யம் உள்ளிட்ட முக்கிய ஸ்தலங்களில் காவல்துறையினர் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தியும், சோதனைச்சாவடி அமைத்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  ஒரு சில இடங்களில் காரில் வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதையும் காண முடிந்தது.  இதனால் பலர் தங்களது வீட்டின் மாடியிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

இந்த நிலையில் வரும்  11-ம் தேதி (புதன்கிழமை) ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோவில்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நாட்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து