முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதனை படைத்த 7 இந்தியர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ: ஒலிம்பிக் வரலாற்றில் இதுவை இல்லாத அளவு இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

நீரஜ் சோப்ரா

கடந்த 100 ஆண்டுகளில் ஒலிம்பிக் தடகள வராலாற்றில் இந்தியா தங்கம் வென்றதில்லை என்ற ஏக்கத்தை போக்கி டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை ஈட்டி எறிதலில் வென்றார் நீரஜ் சோப்ரா.

இதில் தனது முதல் முயற்சியாக நீரஜ் சோப்ரா 87.03 மீ  எறிந்தார். 2-வது முயற்சியில் 87.58  மீட்டர் எறிந்தார். 3-வது முயற்சியில் 76.79மீட்டர் எறிந்து உள்ளார்.  நீரஜ் சோப்ரா முதல் 4 முயற்சிகளில் முதல் இடம் பிடித்து இருந்தார்.

மீராபாய் சானு 

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கத்தை  மீராபாய் சானு வென்று சாதனை படைத்தார். பளு தூக்குதல் - பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க வேட்டை ஆரம்பித்தது.

ரவிக்குமார் தாஹியா

மல்யுத்தம் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா ஆடவருக்கான 57 கிலோ பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இறுதிச்சுற்றில் ரஷிய வீரர் சிறப்பாக விளையாடி 7-4 என்கிற புள்ளிக்கணக்கில் இந்திய வீரர் தாஹியாவை தோற்கடித்தார். இதையடுத்து ரவிக்குமார் தாஹியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 

ஆடவர் ஹாக்கி அணி

ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலத்திற்கான போட்டியில் இந்திய அணி ஜெர்மனியை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தி பதக்கத்தை வென்றது.

லவ்லினா போர்கோஹைன்

மகளிருக்கான 69 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லவ்லினா துருக்கி வீராங்கனை புசேனாஸ் சுர்மெனெலியிடம் 5-0 என்ற கணக்கில் லவ்லினா தோல்வியைத் தழுவினார். இதன் மூலம் லவ்லினா வெண்கலப் பதக்கம் பெற்றார்.

பி.வி.சிந்து

வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் சீனாவின் ஹி பிங்யாஜிவோவை பி.வி. சிந்து எதிர்கொண்டார். இந்த போட்டியில் பி.வி. சிந்து 21-13, 21-15 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றார். 

இந்த வெற்றி மூலம் 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பி.வி. சிந்து பெற்றுள்ளார். இதற்கு முன் 2016 ரியோ ஒலிம்பிக்கில் பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பஜ்ரங் பூனியா 

வெண்கல பதக்கத்திற்கான மல்யுத்த போட்டியில் பஜ்ரங் பூனியா வெற்றிப் பெற்று பதக்கம் வென்றார். ஆடவர் ஃபிரீஸ்டைல் மல்யுத்த போட்டியின் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா மற்றும் கஜகஸ்தானின் தவுலத் நியாஜ்பெகோவ் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் மோதினர். இதில், 8-0 என்ற புள்ளி கணக்கில் பூனியா வெற்றி பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து