முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் வென்ற ' நீரஜ் சோப்ரா 'வுக்கு சி.எஸ்.கே கேப்டன் டோனி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 8 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை: ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரூ.1 கோடி ரொக்கப் பரிசும், ஸ்பெஷல் ஜெர்ஸியும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் சி.எஸ்.கே கேப்டன் டோனி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ரூ.1 கோடி பரிசு...

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்ட அறிவிப்பில், “இந்தச் சிறப்பான வரலாற்றுச் சாதனையை நினைவுகூரும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சார்பிலும், நாட்டின் பெருமளவு மக்களால் விரும்பப்படும் அணி சார்பிலும், லெப்டினன்ட் கர்னல் எம்.எஸ்.தோனி தன்னுடைய வாழ்த்துகளை நீரஜ் சோப்ராவுக்குத் தெரிவித்துள்ளார். இந்த வரலாற்றுச் சாதனையை கவுரவிக்கும் வகையில் சி.எஸ்.கே அணி நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கி கவுரவிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

பெருமைப்படுகிறோம்...

சி.எஸ்.கே அணியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவின் சாதனையால் இந்தியர்களாகிய நாம் பெருமைப்படுகிறோம். சோப்ராவின் சாதனை, லட்சக்கணக்கான இளைஞர்களை விளையாட்டுக்கு வரவழைத்து, பங்குபெற வைக்கும், எந்த விளையாட்டிலும் உச்சத்துக்குச் செல்ல உந்துதலாக இருக்கும்.

சிறப்பு ஜெர்ஸி...

நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்த நினைவாக சி.எஸ்.கே அணி 8758 என்ற எண் பொறிக்கப்பட்ட சிறப்பு ஜெர்ஸியையும் அவருக்கு வழங்க உள்ளது.  ஈட்டி எறிதலில் 87.58 மீட்டர் தொலைவு எறிந்து தங்கம் வென்ற சோப்ராவின் முயற்சி ஒட்டுமொத்த தேசத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்காக 8758 என்ற எண் அச்சிடப்பட்ட சிறப்பு ஜெர்ஸியையும் சி.எஸ்.கே நிர்வாகம் சோப்ராவுக்கு வழங்க உள்ளது” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து