முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டிங்ஹாம் முதல் டெஸ்ட்: மழையால் ஆட்டம் 'டிரா'

ஞாயிற்றுக்கிழமை, 8 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

நாட்டிங்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிப்பெற்று சாதனை படைக்குமா இந்திய அணி என்ற ஆவல் இந்திய ரசிகர்கள் இடையே மேலோங்கிய நிலையில் கடைசி நாளான நேற்று மழையால் ஒரு பந்துகூட வீசாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனை அடுத்து முதல் டெஸ்ட் போட்டி டிராவானது. 

278 ரன் குவிப்பு...

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 183 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 278 ரன் குவித்தது.

303 ரன்னில் அவுட்...

95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன் எடுத்திருந்தது. 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 303 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 209 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பும்ரா அசத்தல்...

கேப்டன் ஜோரூட் சதம் அடித்தார். அவர் 109 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டும், முகமது சிராஜ், ‌ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டும், முகமது ‌ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்தியா 52 ரன்கள்...

209 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடிய இந்திய அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ரன் எடுத்து இருந்தது. ராகுல் 26 ரன்னில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் ஆட்டம் இழந்தார். ரோகித் சர்மா, புஜாரா தலா 12 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

9 விக்கெட்கள்...

நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற இருந்து. இந்தியாவின் வெற்றிக்கு மேலும் 157 ரன் தேவை. கைவசம் 9 விக்கெட் இருந்த நிலையில் நேற்று மழையால் ஒரு பந்து கூட வீசாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனை அடுத்து முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து