முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணியின் மேட்ச் வின்னர் ஜஸ்ப்ரிட் பும்ரா: ராகுல் புகழாரம்

திங்கட்கிழமை, 9 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

இந்திய அணியின் மேட்ச் வின்னர் பும்ரா என தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், தனக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காததால் விரக்தியில் இருந்ததாகவும் ஆனால் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

சிறப்பான ஆட்டம்...

நாட்டிங்கம்மில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் களமிறங்கினார். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய ராகுல் 84 ரன்கள் எடுத்தார். 2-வது இன்னிங்ஸில் விரைவாக ஆட்டமிழந்தாலும் 38 பந்துகளில் 26 ரன்களை சேர்த்தார். அதில் 6 பவுண்டரிகளும் அடங்கும்.

விரக்தி ஏற்பட்டது...

இது குறித்து பேசிய கே.எல்.ராகுல் "கடந்த சில தொடர்களில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் ஆஸ்திரேலியா உள்ளிட்ட தொடர்களில் இந்தியா வெற்றிப்பெற்றதும் அணியில் ஒருவனாக இருந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அணியில் இருந்தும் விளையாட வாய்ப்பு அமையாதது மிகவும் விரக்தியை ஏற்படுத்தியது. 

தற்போது மகிழ்ச்சி...

ஏனென்றால் எப்போதும் ஒரு வீரருக்கு மைதானத்தில் சவால்களை எதிர்கொள்ளவே பிடிக்கும். ஒரு வழியாக இப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது" என்றார். மேலும் பேசிய அவர் "கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவே நினைத்தேன். என்னால் முடிந்த அளவுக்கு ரன்களையும் சேர்த்துள்ளேன். அது அணிக்கு உதவியாகவும் இருந்தது" என்றார். 

மேட்ச் வின்னர்...

பும்ரா குறித்து பேசிய ராகுல் "ஒவ்வொரு போட்டியிலும் தன்னை மெருகேற்றி வருபவர் பும்ரா. டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான நாள்களில் இருந்து அவர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். பும்ரா அணியின் "மேட்ச் வின்னர்". அவர் இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசியது அனைவருக்கும் மகிழ்ச்சி" என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து