முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீரஜ் சோப்ராவுக்கு புதிய கவுரவம்: ஆக. 7 - ம் தேதி 'ஈட்டி எறிதல் தினமாக' கொண்டாட முடிவு

செவ்வாய்க்கிழமை, 10 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

டோக்யோ ஒலிம்பிக்  ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை கவுரவிப்பதற்காக, ஆகஸ்ட் 7-ம் தேதி 'ஈட்டி எறிதல் நாள்' என்று பெயரிட இந்தியா தடகள சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

இந்தியா முழுவதும்... 

இந்திய தடகள சம்மேளத்தின் திட்டக் குழு தலைவர் லலித் பனோட், இந்த விளையாட்டை ஊக்குவிக்கும் முயற்சியாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 அன்று இந்தியா முழுவதும் ஈட்டி எறிதல் போட்டிகள் நடத்தப்படும் என்று கூறினார்.

தடகளத்தில் பதக்கம்... 

இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆகஸ்ட் -7 அன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில் தடகள போட்டிகளில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

48-வது இடத்தை...

11 ஆயிரம் வீரர்களும், 200 நாடுகளும் கலந்துகொண்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 நான்கு வெண்கல பதக்கங்கள் என 7 பதக்கங்களுடன், பதக்கப்பட்டியலில் 48-வது இடத்தை பிடித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து