முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எளிய முறையில் நடந்த ஸ்ரீவில்லி. ஆண்டாள் கோவில் தங்க தேரோட்டம்

புதன்கிழமை, 11 ஆகஸ்ட் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் 108 வைணவ திருத்தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இங்கு கோவில் கொண்டுள்ள ஆண்டாள்( நாச்சியார்)என்னும் பெண் தெய்வம் அவதரித்த ஆடிப்பூர நன்னாள் அன்று ஆண்டாள் ரெங்கமன்னார் தேரில் எழுந்தருளி வீதி உலா வரும்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க தேரினை வடம் பிடித்து இழுத்து நிலையம் சேர்ப்பது வழக்கம்.

கடந்த ஆண்டு தேர் திருவிழா ஊரடங்கு காரணமாக கோவில் வளாகத்திற்குள் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. அதே போல் இந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்துள்ள நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா மிகவும் எளிமையாக நடைபெற்றது. தேர்திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆண்டாள் ரெங்கமன்னார் வீதிஉலா கோவில் வளாகத்திற்குள்ளேயே எளிமையாக நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று 11-ம் தேதி துவங்கியது.

முன்னதாக ஆண்டாள் ரங்கமன்னார்க்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று கோவில் வளாகத்தில் உள்ள தங்கத்தேரில் ஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளினர். 6:20 மணிக்கு தங்கத் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், மதுரை மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் குமார துரை, மாவட்ட ஒன்றிய குழு தலைவர் வசந்தி மான் ராஜ், தக்கார் ரவிச்சந்திரன், டி.எஸ்.பி. நமச்சிவாயம், கோவில் செயல் அலுவலர் இளங்கோவன், அ.தி.மு.க. நகர செயலாளர் எஸ். எம். பாலசுப்பிரமணியம், நகராட்சி ஆணையாளர் மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டனர். 

தேரோட்ட திருவிழா சமூக இடைவெளியுடன் பக்தர்கள் முக கவசம் அணிந்து எளிமையான முறையில் அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடைபெற்றது. பூஜைகளை அர்ச்சகர் ரகு பட்டர் தலைமையில் ஸ்தானிகம் ரங்கராஜன் என்ற ரமேஷ் வேத பிரான் சுதர்சன் கோவில் மணியம் கோபி கிருஷ்ண அய்யங்கார் ஆகியோர் செய்தனர். தேரோட்ட விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், கோவில் செயல் அலுவலர் இளங்கோவன், ஆய்வாளர் பாண்டியன் மற்றும் திருகோயில் அலுவலர்களும பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து