முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை கோவில் நடை வருகிற 15-ம் தேதி திறப்பு

வியாழக்கிழமை, 12 ஆகஸ்ட் 2021      ஆன்மிகம்
Image Unavailable

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை  ஐயப்பன் கோவில் நடை வருகிற ஆவணி மாத பூஜைகளுக்காக 15-ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. 

16-ம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அன்று காலை 5.55 முதல் 6.20 வரை நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. இதற்கான நேரத்தை பந்தளம் ராஜகுடும்பத்தினர் குறித்து கொடுத்துள்ளனர். இதையடுத்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிறை புத்தரிசி பூஜை நடைபெறும் நேரத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.  இந்த பூஜையை தந்திரி கண்டரரூ ராஜிவரரு நடத்துகிறார். இப்பூஜையில் மாளிகைபுரம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் இருந்து நெற்கதிர்கள் எடுத்து வரப்படுகிறது.  நிறை புத்தரிசி பூஜையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கோவிலில் இருந்து நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும். இதனை வீடுகளில் வைத்திருந்தால் செல்வம் கொழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே இந்த பூஜையில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். ஆனால் இந்த முறை கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.  அதன்படி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே இம்முறை கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தினமும் 15 பக்தர்களை அனுமதிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.  கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும். இல்லையேல் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

15-ந்தேதி திறக்கப்படும் கோவில் நடை வருகிற 21-ந் தேதி ஓணம் பண்டிகை வரை திறந்து இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து