முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாராளமாக கைது செய்யுங்கள்: நடிகை மீரா மிதுன் அதிரடி பேச்சு

வியாழக்கிழமை, 12 ஆகஸ்ட் 2021      சினிமா
Image Unavailable

சர்ச்சைகளை பேசி அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குபவர் நடிகை மீரா மிதுன். சமீபத்தில் பட்டியல் இன மக்களைப்பற்றி இழிவாக பேசி சர்ச்சையில் சிக்கினார். அவர் மீது 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். அந்த வீடியோவில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கும் வகையில் அவர் பேசியிருக்கிறார். நான் ஒட்டுமொத்த பட்டியல் இன மக்களை பற்றி தவறாக பேசவில்லை. என்னை தொந்தரவு செய்தவர்களை பற்றி தான் குறிப்பிட்டு பேசினேன். என்னை கைது செய்ய வேண்டும் என்கிறார்கள். தாராளமாக கைது செய்யுங்கள். ஏன் காந்தி, நேரு சிறைக்கு போகவில்லையா...  என்னை கைது செய்ய முடியாது. அப்படி ஒரு சூழல் எனக்கு வராது. அப்படியே கைது செய்ய வேண்டும் என்றால் அது கனவில் தான் நடக்கும். இதற்காகத்தானே 5 வருடங்களாக முயற்சி செய்து வருகிறீர்கள். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டேயிருங்கள் என கூறியுள்ளார். 

மேலும் தமிழ் பேசும் ஒரு தமிழ்நாட்டு பெண் வளர்ச்சி அடைவது இங்குள்ள ஆண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. இங்கு வேற்று மொழி பெண்கள் மட்டுமே வளர்ச்சியடைய முடியும். காரணம் அவர்கள் இவர்களின் ஆசைக்கு இணங்குகிறார்கள். அதோடு என் மீது அனைவருமே ஆசைப்படுவது தான் எனது இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம். ஒரு தமிழ் பெண்ணை யாருமே இங்கே வெற்றியடைய விடமாட்டார்கள். ஆனாலும் சீக்கிரமே இதற்கெல்லாம் ஒரு முடிவு வரும் என்று அந்த வீடியோவில் ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார் மீராமிதுன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!