முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

*ராகவா லாரன்ஸ் நடிக்கும் துர்கா*

வெள்ளிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் காஞ்சனா பெயரில் வெளிவந்த அனைத்து படங்களுமே வெற்றி பெற்று சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. அந்த படங்களின் மூலம்  குழந்தைகளையும் பெரியவர்களையும்   ரசிக்கச் வைத்த பெருமை ராகவா லாரன்ஸுக்கு உண்டு. இந்நிலையில் தனது அடுத்த பட தயாரிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தானே தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் " துர்கா  ". விரைவில் படத்தின்  இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

ராகவா லாரன்ஸ் தற்போது ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும்  " ருத்ரன் " படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுத , ஆடுகளம் கதிரேசன், வெற்றிமாறன் இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் " அதிகாரம் " என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து