முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் எம்.எஸ். டோனி என்ற சகாப்தம் ஓய்வு பெற்று ஓராண்டு நிறைவு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை : சர்வதேச கிரிக்கெட் அரங்கில்எம்.எஸ். டோனி என்ற சகாப்தம் ஓய்வு பெற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டனாக இருந்தவர் டோனி. கிரிக்கெட் வரலாற்று சுவடுகளில் ஓர் பெயர் எப்போதும் இருக்குமென்றால் அது டோனி என்றால் யாராலும் மறுக்க முடியாது.

விடை பெற்றார்...

2019 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிதான் இந்தியாவுக்காக டோனி விளையாடிய கடைசிப் போட்டி. கடந்தாண்டு இந்தியா தன்னுடைய 74-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வந்த நிலையில் இரவு 7.29 மணிக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றிக்கூறி சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெற்றார் இந்திய கிரிக்கெட்டின் கதாநாயகன் மகேந்திர சிங் டோனி.

ஒரே ஆறுதல்...

டோனி ஓய்வுப்பெற்றுவிட்டாலும் மஞ்சள் நிற ஜெர்சியில் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடுவது, மைதானத்தில் அவரை பார்ப்பது மட்டுமே ரசிகர்களுக்கான ஒரே ஆறுதல். என்னதான் இருந்தாலும் இந்திய அணியின் ஜெர்சியில் பார்ப்பது போல வருமா என ரசிகர்கள் விசும்பினாலும் இப்போதும் உண்மை அதுதானே.

விளையாடவில்லை... 

இந்திய அணிக்காக உலகக் கோப்பையில் விளையாடிய டோனி, அதன்பின்னர் மீண்டும் இந்திய அணியில் விளையாடவில்லை. இதனால் பல்வேறு கிரிக்கெட் வீர்ரகள், விமர்சகர்கள் என எல்லோரும் டோனி ஓய்வுக் குறித்த கருத்துகளை தெரிவித்து வந்தனர். ஆனால் மனுஷன் எதற்கும் அசைந்துக்கொடுக்கவில்லை. அவருக்கு எப்போதும் தனி ஸ்டைல் உண்டு. தன்னுடைய ஓய்வுக் குறித்த அறிவிப்பையும் அலட்டிக்காமல் அதே ஸ்டைலில் தெரிவித்தார்.

மகத்தான கேப்டன்...

2005-ல் தொடங்கிய டோனியின் சகாப்த பயணம் சென்னையில் 2020 ஆகஸ்ட் 15-ம் தேதி முடிவடைந்தது. ஏன் டோனியை ரசிகர்களுக்கு இவ்வளவு பிடிக்கிறது ? சச்சின் சொன்னதுப்போல இந்திய கிரிக்கெட்டின் மகத்தான கேப்டனாக அவர் இருந்ததே காரணம்.

குணநலன்கள்...  

மேலும் தனி மனித ஒழுக்கமும் அவரின் குணநலன்களும் ரசிகர்களுக்கு பாடம். அதனால்தான் இத்தனை ஆண்டுகள் டோனியை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள், இன்னும் கொண்டாடுவார்கள். நாளையே அவர் ஐபிஎல்லில் இருந்து விலகினாலும் இந்திய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் கிரிக்கெட் உலகுக்கு டோனி எப்போதும் ஓர் சகாப்தமே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து