முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரைக்குடி மாணவன் சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 15 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 12-ம் வகுப்பு படித்து வருபவர் கபிலேஷ்வரன். இவர் தனியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் முயற்சி மேற்கொண்டார். 45 நிமிடங்களில் 8500 முறை ஸ்கிப்பிங் செய்து சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த கபிலேஷ்வரனுக்கு அந்நிறுவனத்தின் நிறுவனர் நிமலன் நீலமேகம் சான்றிதழை வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் சுரேந்திரன், அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் சுவாமிநாதன் ஆகியோர் மாணவனின் சாதனையைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் பட்டய விருது வழங்கி சிறப்பித்தனர். உலக சாதனை மாணவன் கபிலேஷ்வரனுக்கு, டாக்டர் சுரேந்திரன் ஊக்கத் தொகையாக 5001 ரூபாய் கொடுத்து பாராட்டினார்.

____________

கோபமடைந்த விராட் கோலி

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன்பு இந்திய வீரர் கே.எல் ராகுல் பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்துகொண்டிருந்தார். முகமது ஷமி வீசிய 69-வது ஓவரின்போது, பாட்டில் மூடி ஒன்று ராகுல் மீது வீசப்பட்டது. இதனால் கோபமடைந்த இந்திய கேப்டன் விராட் கோலி அதை வெளியே வீசும்படி ராகுலிடம் கூறினார்.

இதனால் நடுவர்கள் மைக்கேல் கௌ மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வர்த்திடம் இந்திய வீரர்கள் இதுகுறித்து பேசியதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. அப்போது கோலி மிகவும் கோபமாக காணப்பட்டார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பாக காணப்பட்டார்.

___________

உணர்ச்சிவசப்பட்ட நீரஜ் சோப்ரா 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை வென்றது. ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று பதக்கம் வென்ற 32 வீரர், வீராங்கனைகளுக்கு சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

டெல்லி அசோகா ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்கள் செங்கோட்டைக்கு புறப்பட்டனர். ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா பேசுகையில், “ சுதந்திர தினவிழாவில் கொடி ஏற்றும் நிகழ்வை முன்பு நாங்கள் டிவியில் பார்ப்போம். இப்போது நாங்கள் தனிப்பட்ட முறையில் நேரில் செல்கிறோம். இது ஒரு புதிய அனுபவம் என்றார்.

 

_____________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து