முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாள் தடைக்கு பின்னர் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி : அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திங்கட்கிழமை, 16 ஆகஸ்ட் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

மதுரை : தமிழக கோயில்களில் மீண்டும் நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில், பழநி முருகன் கோயில், ராமேஸ்வரம் கோயில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் நேற்று கொரோனா வழிகாட்டி நெறிமுறையை பின்பற்றி, பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள் உட்பட அனைத்து வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி கடந்த 13-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. அனைத்து கோயில்களின் நுழைவாயிலில் பொதுமக்கள் செல்ல முடியாத வண்ணம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதனால் கோயிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். மசூதிகளிலும் தொழுகையில் பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. பெரும்பாலான சர்ச்சுகளிலும் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர்கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், பழநி முருகன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வெளியூர்களில் இருந்து ராமேஸ்வரம் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நேற்று அதிகாலை முதல் அக்னிதீர்த்த கடலில் நீராடினர்.

பின்னர் கோயிலில் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் கோயிலுக்குள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட போதிலும், கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடுவதற்கான தடை தொடர்கிறது. இதேபோல் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்பட தமிழகத்தின் முக்கிய கோயில்களில் நேற்று கூட்டம் அலைமோதியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து