முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

272 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா: டிராவை நோக்கி லார்ட்ஸ் டெஸ்ட்

திங்கட்கிழமை, 16 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லார்ட்ஸ்: லார்ட்ஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் முகமது ஷமி - பும்ரா ஆட்டத்தால் இந்திய அணி 298 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இங்கிலாந்துக்கு 272 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இதனால் 2-வது டெஸ்ட் போட்டியும் வெற்றி - தோல்வியின்றி டிராவில் முடிவடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் இன்னிங்ஸ்...

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 391 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

இந்தியா 259 ரன்கள்... 

27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி கடைசி நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையில் 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்திருந்தது. ஷமி 52 ரன்களுடனும், பும்ரா 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 259 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.

272 ரன்கள் இலக்கு...

இதனால், உணவு இடைவேளை முடிந்தபிறகு இங்கிலாந்தை பேட்டிங் செய்ய இந்திய அணி அழைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஷமி, பும்ராவே களமிறங்கினர். உணவு இடைவேளைக்குப் பிறகு 9 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இந்த 9 பந்துகளில் 3 பவுண்டரிகள் கிடைத்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்த இந்திய அணி இங்கிலாந்துக்கு 272 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

5-ம் நாளில்...

முன்னதாக, இந்தியா - இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான நேற்று 5-ம் நாளில், ஆண்டர்சன் ஓவரில் ரிஷப் பந்த் ஒரு பவுண்டரி அடித்தார். பிறகு அதே ஓவரில் இஷாந்த் சர்மாவும் ஒரு பவுண்டரி அடிக்க இந்திய ரசிகர்கள் குஷியானார்கள். ஆனால் ரிஷப் பந்த் 22 ரன்களிலும் இஷாந்த் சர்மா 16 ரன்களிலும் ஆலி ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு பும்ராவும் ஷமியும் கூட்டணி சேர்ந்தார்கள்.

ஷமி - பும்ரா...

முதல் இன்னிங்ஸில் ஆண்டர்சனுக்கு பும்ரா பவுன்சர்கள் வீசியதை மனத்தில் வைத்துக்கொண்டு அதேபோல பவுன்சர் பந்துகளை வீசி நெருக்கடி கொடுத்தார்கள் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள். பும்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். பும்ரா நடுவரிடம் முறையிட்டார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வுட் வீசிய பவுன்சர் பந்து பும்ராவின் ஹெல்மெட்டில் பட்டது. இந்தச் சூழலால் பேட்டிங்கில் அதிகக் கவனம் செலுத்தி முக்கியமான ரன்களைச் சேர்த்தார்கள் பும்ராவும் ஷமியும். இந்திய அணி 100 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்தது. இருவரும் கூட்டணி சேர்ந்து 72 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்கள்.

டெஸ்ட் அரை சதம்...

பும்ராவும் ஷமியும் தொடர்ந்து ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியை வெறுப்பேற்றினார்கள். 57 பந்துகளில் அரை சதம் எடுத்தார் ஷமி. இது அவருடைய 2-வது டெஸ்ட் அரை சதம். அலி ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸரும் அடித்து அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். 

298 ரன்கள்...

5-ம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 108 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஷமி 56, பும்ரா 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

டிராவாக வாய்ப்பு...

272 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. இன்னும் 62 ஓவர்கள் மீதமுள்ளன. சுமார் 4.5 ரன் ரேட் வேகத்தில் விளையாடினால் தான் இங்கிலாந்து அணியால் வெற்றி பெற முடியும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4 ரன் ரேட் என்பதே பெரிய விஷயம். அதனால், போட்டி டிரா ஆவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை இந்திய அணி சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் வெற்றி வாய்ப்பு கிட்டும். 

BOX - 1

விராட் கோலி ஸ்லெட்ஜிங்

ஜேம்ஸ் ஆண்டர்சன் கவனத்தை திசைத்திருப்புமாறு அவர் பிட்சில் அபாயகரமான பகுதியில் ஸ்பைக் ஷூவுடன் ஓடுகிறார் இது பிட்சை சேதம் செய்யும் முயற்சி என்று கோலி ஒரு குற்றச்சாட்டை முன் வைக்க அதற்கு ஆண்டர்சனும் தவறான வார்த்தையைப் பயன்படுத்தியதாக தெரிகிறது, 

 

அதற்குப் பதிலடியாக கோலி, “என்னை மீண்டும் திட்டுகிறீர்களா? இது உங்கள் வீட்டு கொல்லைப்புறம் அல்ல” என்றார். அதாவது பேக்யார்டு கிரிக்கெட் போல் பிட்சில் காலை பதிக்க முடியாது, இது டெஸ்ட் மேட்ச் உங்கள் வீட்டு கொல்லைப்புறம் போல் சேதம் செய்வதற்கான இடமல்ல என்ற அர்த்தத்தில் விராட் கோலி பதிலுரைத்தர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து