முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தூர் மாணவர்கள் அசத்தல்

திங்கட்கிழமை, 16 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கடந்த ஆகஸ்டு 11, 12, 13 ஆகிய தேதிகளில் இமாச்சல் பிரதேசம் மணாலியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம் சார்பாக சாத்தூரில் உள்ள சக்கரவியூகம் கராத்தே மற்றும் சிலம்பம் குழுவினர் பங்குபெற்று வெற்றி பதக்கங்களை பெற்றனர்.

இதில், 6 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலம் உட்பட 14 பதக்கங்களை பெற்று சிறந்த குழுவிற்கான சிறப்பு பரிசையும் வென்று வந்த இவர்கள் சாத்தூர் ரயில் நிலையம் வந்தபோது அவர்களது பெற்றோர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று மகிழ்ந்தனர்.

____________

டி.என்.பி.எல் -  சேப்பாக் சாம்பியன்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய திருச்சி வாரியர்ஸ் அணி வீரர்கள் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் 20 ஓவர்களில் முடிவில் திருச்சி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

____________

டோனியின் தீவிர ரசிகர்

டோனியை பார்க்க ஆவலுடன் 1400 கிலோ மீட்டர் தூரம் நடைவழி பயணமாக நடந்து வந்துள்ளார் டோனியின் ரசிகர் ஒருவர். இந்த நடைவழி பயணம் ஹரியானாவின் ஜலான் கெடா கிராமத்தில் துவங்கி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வந்து முடிந்துள்ளது. 18 வயதான அஜய் கில் தான் டோனியை நேரில் பார்க்க இப்படி வந்துள்ளார். இருந்தாலும் டோனியை பார்க்க வேண்டுமென்ற அவரது ஆவல் இன்னும் நிறைவேறாமல் உள்ளது. 

டோனி தற்போது ஐபிஎல் தொடரில் விளையாட அமீரகத்தில் முகாமித்துள்ளார். அவர் ராஞ்சி திரும்ப மூன்று மாத காலம் ஆகும் என சொல்லப்பட்டுள்ளது. அதுவரை பொறுத்திருந்து அவரை பார்த்துவிட்டு தான் ஊர் திரும்புவேன் என முரண்டு பிடித்த அந்த பாசக்கார ரசிகருக்கு ராஞ்சி மக்கள் ஆறுதல் சொல்லி ஊர் திரும்ப விமான டிக்கெட் போட்டுக் கொடுத்துள்ளனராம். 

_________

யு.எஸ். ஓபன் - ஃபெடரர் விலகல்

முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதால் யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து பிரபல வீரர் ரோஜர் ஃபெடரர் விலகியுள்ளார். கடைசியாக 2018 ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார் ஃபெடரர். அதன்பிறகு அவரால் மற்றுமொரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல முடியாத நிலைமையே உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். 

இந்நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதால் யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து விலகியுள்ளார் ஃபெடரர். இதுபற்றி அவர் கூறியதாவது., விம்பிள்டனுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதைக் கூறுகிறேன். இது எளிதானதல்ல. விம்பிள்டனில் என்னுடைய முழங்காலை மேலும் காயமடைய செய்துவிட்டேன். அதனால் மருத்துவர்களிடம் பரிசோதனை செய்துகொண்டேன். இதைச் சரிசெய்ய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார்கள். நானும் இதற்கு சம்மதம் சொல்லிவிட்டேன் என்றார்.

___________

கவலையில் ரஷீத் கான்

ரஷீத் கான் இப்போது இங்கிலாந்தில் ஹண்ட்ரட் கிரிக்கெட்டில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். உலகத் தலைவர்களே ஆப்கானையும் மக்களையும் காப்பாற்றுங்கள் என்று அவர் உலகத்தலைவர்களுக்கு அறைகூவல் விடுத்தார். இந்நிலையில் ஸ்கை ஸ்போர்ட்ஸில் கெவின் பீட்டர்சன் கூறியதாவது:

ஏகப்பட்ட விஷயங்கள் ரஷீத் கானின் நாடான ஆப்கானில் நடைபெற்று வருகின்றன. நானும் ரஷீத் கானும் இது குறித்து நீண்ட நேரம் பேசினோம். அப்போது அவர் தன் குடும்பத்தை ஆப்கானிலிருந்து வெளியே கொண்டு வர முடியவில்லை என்று கவலைப்பட்டார். அவருக்கு பாவம் நிறைய விஷயங்கள் நடந்து வருகின்றன. மிகவும் கவலையாக இருக்கிறார் ரஷீத் கான், என்றார்.

__________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து