முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லார்ட்ஸ் டெஸ்ட்டில் 60 ஓவர்களில் பெற்ற வெற்றி மிகவும் சிறப்பானது: கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சி

செவ்வாய்க்கிழமை, 17 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

கடந்த முறை லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் டோனி தலைமையின் கீழ் வெற்றிப்பெற்றது மிகவும் ஸ்பெஷலானதாக இருந்தது. ஆனால் இம்முறை 60 ஓவர்களில் பெற்ற வெற்றி இன்னும் ஸ்பெஷலானது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

151 ரன் வித்தியாசத்தில்...

இந்திய கிரிக்கெட் அணி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தை 120 ரன்களில் ஆல் அவுட் செய்தது இந்தியா. இதன் மூலம் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிராஜ் (4),பும்ரா (3), இஷாந்த் ஷர்மா (2), ஷமி (1) என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

நம்பிக்கை இருந்தது... 

இது குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி "60 ஓவர்களில் இங்கிலாந்து வீரர்களை ஆல் அவுட் ஆக்குவோம் என்ற நம்பிக்கை இருந்தது. எங்களது 2-வது இன்னிங்ஸின்போது மைதானத்தில் சில பதற்றமான சம்பவங்கள் நடந்தது. அந்த சூழ்நிலைதான் வீரர்களுக்கு உத்வேகத்தை அளித்தது. அதனால்தான் பும்ராவும், ஷமியும் பெவிலியன் திரும்பும்போது அவர்களை கெளரவிக்கும் விதமாக எழுந்து நின்று கை தட்டினோம். அவர்கள் இந்த அளவுக்கு பேட்டிங் செய்ததற்கு பேட்டிங் பயிற்சியாளர் பங்கு மிகவும் முக்கியமானது. அவர்கள் இருவரும் சேர்த்த ரன்கள் விலை மதிப்பில்லாதது" என்றார்.

முகமது சிராஜ் அபாரம்...

மேலும் பேசிய அவர் "கடந்த முறை லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் டோனி தலைமையின் கீழ் வெற்றிப்பெற்றது மிகவும் ஸ்பெஷலானதாக இருந்தது. ஆனால் இம்முறை 60 ஓவர்களில் பெற்ற வெற்றி இன்னும் ஸ்பெஷலானது. அதிலும் முகமது சிராஜ் அற்புதமாக பந்துவீசினார். வேகப்பந்துவீச்சாளர்கள் முக்கியமான நேரங்களில் முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தனர். இதனால் எங்களுடைய பந்துவீச்சாளர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்தோம். எப்போதும் வெளிநாட்டு ஆடுகளங்களில் பெறும் வெற்றிகள் சிறப்பானது" என்றார் விராட் கோலி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து