முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் உடல்நலக்குறைவால் அவதிப்படும் ' நீரஜ் சோப்ரா '

புதன்கிழமை, 18 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: டெல்லியிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா, மீண்டும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் பாராட்டு விழாவிலிருந்து பாதியில் விலக நேர்ந்தது.

தங்கப் பதக்கம்... 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா (23) தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். இறுதிச்சுற்றில் அவர் 87.58 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற ஆகஸ்ட் 7-ம் தேதியை, தேசிய ஈட்டி எறிதல் தினமாக இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது.

காய்ச்சல் - வலி...

கடந்த வாரம் கடுமையான காய்ச்சல், தொண்டை வலியால் அவதிப்பட்டார் நீரஜ் சோப்ரா. இதன் காரணமாக அவர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்தது. இதன்பிறகு டெல்லியில் பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். 

6 மணி நேரம்... 

பிறகு ஹரியாணாவில் உள்ள சொந்த ஊரான பானிபட்டுக்கு நேற்று முன்தினம் வந்தார். கண்ணாடி கூரை கொண்ட எஸ்.யூ.வி. காரில் அழைத்து வரப்பட்டார். வழக்கமாக இரண்டு மணி நேரத்தில் வரவேண்டிய பயணம் ஆறு மணி நேரமாக நீண்டது. ஹரியாணாவுக்குள் அவருடைய கார் நுழைந்தவுடன் சின்னச் சின்ன பாராட்டு விழாக்களில் அவர் பங்கேற்க வேண்டியிருந்தது. இதனால் சொந்த ஊர் வந்து சேர ஆறு மணி நேரம் ஆகிவிட்டது. இதனால் நீரஜ் சோப்ரா மிகவும் சோர்ந்து போனார். 

உடல்நலக்குறைவு... 

பானிபட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள கந்த்ரா கிராமத்தில் நீரஜ் சோப்ராவை ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்றார்கள். அங்கு நடைபெற்ற பாராட்டு விழாவின்போது நீரஜ் சோப்ராவுக்கு மேலும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அந்நிகழ்ச்சியில் 20,00 பேர் கலந்துகொண்டார்கள். பலரும் நீரஜ் சோப்ராவுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்கள். 

பாதியிலேயே... 

உடல் ஒத்துழைக்காததால் நிகழ்ச்சியின் பாதியிலேயே மேடையை விட்டு கீழிறங்கினார். மீண்டும் காய்ச்சல் அடித்ததால் அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டார். பிறகு தனது வீட்டுக்குச் சென்றால் ரசிகர்களின் அன்புத்தொல்லையிலிருந்து மீள முடியாது என்பதால் வேறொரு இடத்தில் தற்போது ஓய்வெடுத்து வருகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து