முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணிக்கு திரும்புமாறு ஸ்டோக்ஸை நாங்கள் நிர்பந்திக்க போவதில்லை இங்கிலாந்து பயிற்சியாளர் பேட்டி

புதன்கிழமை, 18 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன்: பென் ஸ்டோக்ஸ் மீண்டும் விளையாடுவாரா என்ற கேள்விக்கு இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் பதிலளித்து ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில் அணிக்கு திரும்புமாறு பென் ஸ்டோக்ஸை 

நாங்கள் நிர்பந்திக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

படுதோல்வி... 

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவிடம் 151 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சொந்த மண்ணில் இங்கிலாந்து வீரர்கள் சோபிக்காமல் உள்ளனர். பேட்டிங்கில் கேப்டன் ஜோ ரூட் மற்றும் பவுலிங்கில் ஆண்டர்சன் தவிர யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

பயிற்சியாளர் பதில்...

இந்நிலையில் லார்ட்ஸ் தோல்விக்கு பின் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் விளையாட உள்ளார் என்று ஊகங்கள் கிளம்ப தொடங்கின. பென் ஸ்டோக்ஸ் மீண்டும் விளையாடுவாரா என்ற கேள்விக்கு இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் பதிலளித்து ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

காத்திருப்போம்... 

பயிற்சியாளர் சில்வர்வுட் கூறுகையில், நாங்கள் ஸ்டோக்ஸை அணிக்கு திரும்பி வரசொல்லி நிர்பந்திக்க மாட்டோம். இதுப்போன்ற சந்தர்பங்களால் அவருக்கு மீண்டும் மனஅழுத்தம் அதிகரிக்கலாம். அவரே வந்து நான் விளையாட தயார் என்று சொல்லும் வரை நாங்கள் காத்திருப்போம். அவருக்கு நாங்கள் எந்த அழைப்பும் விடுக்கப்போவதில்லை என்றார். ஸ்டோக்ஸ் விவகாரத்தில் சில்வர்வுட்டின் கருத்தையே கேப்டன் ஜோ ரூட்டும் தெரிவித்துள்ளார்.

ஸ்டோக்ஸ் திடீர் ஓய்வு...

பென் ஸ்டோக்ஸ் கடந்த மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் 3-0 என்ற வெற்றிக்கு பின் கிரிக்கெட்டிலிருந்து காலவரையற்ற விடுவிப்பு எடுத்தார். மனஅழுத்தம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து சிறுது ஓய்வு தேவைப்படுவதாக பென் ஸ்டோக்ஸ் கூறியிருந்தார். பென் ஸ்டோக்ஸின் இந்த முடிவு இங்கிலாந்து ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து