முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: கே.எல். ராகுல் - சிராஜ் முன்னேற்றம்

புதன்கிழமை, 18 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய்: நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை அடுத்து வெளியான ஐ.சி.சி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் கே.எல் ராகுல், முகமது சிராஜ் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

புதிய தரவரிசை ...

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை புதன்கிழமை வெளியிடப்பட்டது. 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கியப் பங்காற்றிய ராகுல் மற்றும் சிராஜ் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

முன்னேற்றம்...

பேட்டிங்குக்கான தரவரிசையில் ராகுல் 19 இடங்கள் முன்னேறி 37-வது இடத்தைப் பிடித்துள்ளார். பந்துவீச்சுக்கான தரவரிசையில் சிராஜ் 18 இடங்கள் முன்னேறி 38-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

2-வது இடத்தில்...

2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 180 ரன்கள் எடுத்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 2 இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தைப் (893 புள்ளிகள்) பிடித்துள்ளார். முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கும் ஜோ ரூட்டுக்கும் இடையே 8 புள்ளிகளே வித்தியாசம்.

ஜேம்ஸ் ஆண்டர்சன்... 

பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். மார்க் வுட் 5 இடங்கள் முன்னேறி 37-வது இடத்தைப் பிடித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து