முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் சிவபார்வதி கோவில்: பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

வியாழக்கிழமை, 19 ஆகஸ்ட் 2021      ஆன்மிகம்
Image Unavailable

குஜராத்தில் சிவபார்வதி கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். 

பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் குஜராத் மாநிலம் சோம்நாத்தில் உள்ள நடைபாதை, கண்காட்சி மையம் மற்றும் புனரமைக்கப்பட்ட பழைய சோம்நாத் கோவில் வளாகம் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.

ஆன்மிக மற்றும் பாரம்பரிய தலங்களுக்கு புத்தாக்கம் அளிப்பதற்கான திட்டத்தின் கீழ் ரூ. 47 கோடி மதிப்பீட்டில் சோம்நாத் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் சுற்றுலா வசதி மைய வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சோம்நாத் கண்காட்சி மையம், பழைய சோம்நாத் கோவிலின் பாகங்களையும், பழைய சோம்நாத்தின் நாகர் முறையிலான கோவில் கட்டிடக்கலை சிற்பங்களையும் கொண்டுள்ளது.

ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில் ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையால் பழைய சோம்நாத் கோவில் வளாகம் புனரமைக்கப்பட்டுள்ளது. கோவில் சிதலமடைந்ததை கண்ட இந்தூர் அரசி அஹில்யாபாய் இந்த கோவிலை கட்டியதால் அஹில்யாபாய் கோவில் என்றும் இது அழைக்கப்படுகிறது.  பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிக இடவசதியுடன் மொத்த பழைய கோவில் வளாகமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் குஜராத் மாநிலம் சோம்நாத்தில் புதிதாக ஸ்ரீ சிவபார்வதி கோவில் கட்டப்பட உள்ளது. சோம்புரா, சலத்ஸ் முறையில் ரூ.30 கோடி செலவில் இந்த கோவில் கட்டப்பட உள்ளது. இந்த கோவிலுக்கும் பிரதமர் மோடி இன்று காலை காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து