முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த மூன்று பேரைத் தேர்வு செய்யுங்கள்: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு முன்னாள் வீரர் பீட்டர்சன் அறிவுரை

வியாழக்கிழமை, 19 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன்: வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் டேவிட் மலான், லியம் லிவிங்ஸ்டோன், ஹேரி புரூக் ஆகிய மூவரை இங்கிலாந்து அணி தேர்வு செய்ய வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

இந்தியா முன்னிலை...

இந்தியா - இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் நடைபெற்றது. இதில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

பேட்டிங் மோசம்...

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்குச் சில யோசனைகள் கூறியுள்ளார் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன். அவர் கூறியதாவது.,  3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணியை முழுவதுமாக மாற்ற விரும்புகிறேன். 5-ம் நாளன்று இங்கிலாந்து அணி விளையாடியதை விடவும் அது மோசமாக விளையாடிவிடாது. அந்தளவுக்கு இங்கிலாந்து அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது.

3 வீரர்கள் தேர்வு...

இங்கிலாந்து அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களுக்கு இந்த வயதில் நானே எவ்வித அழுத்தமும் இல்லாமல் பந்துவீச முடியும். இதனால் எவ்விதப் பயமும் இன்றி இந்திய அணியினர் பந்துவீசினார்கள். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நன்றாக விளையாடி வரும் டேவிட் மலான், லியம் லிவிங்ஸ்டோன், ஹேரி புரூக் ஆகியோரை 3-வது டெஸ்டுக்குத் தேர்வு செய்யலாம். 

லிவிங்ஸ்டோன்... 

தி ஹண்ட்ரெட் போட்டியில் புரூக் சிறப்பாக விளையாடினார். என்னைக் கவர்ந்துவிட்டார். பர்ன்ஸ், சிப்லி, கிராவ்லியை விடவும் நன்கு விளையாடுகிறார். 5 அல்லது 6-ம் நிலை வீரராக லிவிங்ஸ்டோன் விளையாட வேண்டும். பந்துவீச்சாளர்களுக்கு அவர் அழுத்தம் தருவார். உலகம் முழுக்க உள்ள லீக் போட்டிகளில் பந்துவீச்சாளர்களை அவரால் நன்கு எதிர்கொள்ள முடிகிறது. அதேபோல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவரால் ஏன் நன்கு விளையாட முடியாது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து