முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

"சூர்ப்பனகை" படப்பிடிப்பு நிறைவடைந்தது

வெள்ளிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு , முழுமையாக முடிவடைந்ததாக,  இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள்  மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திக் ராஜு கூறியதாவது... தற்போது போஸ்ட் புரடக்சன் வேலைகளை தீவிரமாக செய்து வருகிறோம், சூர்ப்பனகை படம் அதன் பரபர காட்சிகள், திகில், மர்மம்  மற்றும்  நகைச்சுவை கூறுகள் ஆகியவற்றால் பார்வையாளர்களுக்கு ஒரு புது விதமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என்றார். ஆப்பிள் டிரீ ஸ்டுடியோஸ் சார்பில் ராஜசேகர் வர்மா இப்படத்தை தயாரிக்கிறார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள், குற்றாலம் பகுதியில்  படமாக்கப்பட்டுள்ளது. ரெஜினா கஸண்ட்ரா இப்படத்தில் தொல்பொருள் ஆய்வாளராக நடித்துள்ளார்.  அக்ஷரா கவுடா, மன்சூர் அலிகான், ஜெய பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

சாம் CS இசையமைக்கிறார், கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து