முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலில் காயம் காரணமாக பிரபல வீரர் நடால் விலகல்

வெள்ளிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடப் போவது இல்லை என ரபேல் நடால் அறிவித்துள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து அவர் விலகியிருப்பது டென்னிஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம்...

சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் அரையிறுதிச் சுற்றில் ஜோகோவிச்சிடம் வீழ்ந்தார் நடால். கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை 20 முறையும் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை மட்டும் 13 முறையும் வென்ற நடால், ஜோகோவிச்சை வீழ்த்துவார் என்றே பெரும்பாலான ரசிகர்கள் எண்ணினார்கள். ஆனால் ஆட்டத்தின் முடிவு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இதன்பிறகு விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் மேலும் அதிர்ச்சியடைந்தார்கள்.

காலில் காயம்... 

இந்நிலையில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021-ம் பருவத்தை முடித்துக்கொள்வதாக நடால் அறிவித்துள்ளார். காலில் ஏற்பட்ட காயத்தால் ஒரு வருடமாக அவதிப்படுகிறேன். இதற்குத் தீர்வு காண எனக்கு அவகாசம் தேவைப்படுகிறது. எனக்கு ஊக்கமூட்டும் போட்டிகளில் பங்கேற்க விரைவில் மீண்டு வருவேன். காலின் காயத்திலிருந்து குணமாவதிலும் தினசரி நடவடிக்கைகளிலும் இதை என்னால் செயல்படுத்த முடியும். விரைவில் குணமாக தீவிரமான முயற்சிகளை மேற்கொள்வேன் எனக் கூறியுள்ளார். 

ஃபெடரர் - நடால்...

சமீபத்தில் யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து விலகுவதாக ஃபெடரர் அறிவித்தார். இதையடுத்து நடாலும் யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து விலகியுள்ளார். யு.எஸ். ஓபன் போட்டி ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 12 வரை நடைபெறவுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து