முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்சினாட்டி டென்னிஸ்: 3-ம் சுற்றில் ஒசாகா தோல்வி

வெள்ளிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா சின்சினாட்டி டென்னிஸ் தொடரில், காலிறுதிக்கான வாய்ப்பை இழந்தார்.

அதிர்ச்சி தோல்வி...

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை சுவிட்சர்லாந்தின் ஜில் டீச் மேன் 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

கரோலினா தகுதி...

இந்த வெற்றி மூலம் அவர் கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அதேபோல் பெலிண்டா பென்சிக் (சுவிட்சர்லாந்து), கரோலினா, பிளிஸ்கோவா (செக் குடியரசு), பவுலா படோசா (ஸ்பெயின்) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

சிட்சிபஸ் தகுதி... 

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-ம் சுற்று ஆட்டத்தில் சிட்சிபஸ் 5-7, 6-3, 6-4 என்ற செட்கணக்கில் சோரென்சோ கோனெகோவை (இத்தாலி) தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார். ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், கஸ்பர் ரூட் நார்வே பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் (கனடா) ஆகியோர் கால் இறுதிக்கு தகுதிபெற்றனர்.

போபண்ணா ஜோடி...

முன்னதாக ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-இவான் டோடிக் (குரோஷியா) ஜோடி 6-1, 4-6, 7-10 என்ற செட் கணக்கில் பிலிப் கிராஜ்னோவிச் (செர்பியா)-பாப்ரைஸ் மார்ட்டின் (பிரான்ஸ்) இணையிடம் போராடி தோற்று வெளியேறியது.

அடுத்த சுற்றுக்கு...

நடப்பு சாம்பியன் விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), பாலா படோசா (ஸ்பெயின்), ஆன்ஸ் ஜாபர் (துனிசியா), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), முகுருஜா (ஸ்பெயின்) ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றியை ருசித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

சானியா மிர்சா...

பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் சானியா மிர்சா (இந்தியா)- ஆன்ஸ் ஜாபர் (துனிசியா) இணை 5-7, 2-6 என்ற நேர்செட்டில் வெரோனிகா குடெர்மிடோவா (ரஷியா)-எலினா ரைபகினா (கஜகஸ்தான்) ஜோடியிடம் வீழ்ந்து நடையை கட்டியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து