முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் தேதி மாற்றம்: பி.சி.சி.ஐ அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

நவம்பர் 16 முதல் நடைபெறுவதாக இருந்த ரஞ்சி கோப்பைப் போட்டி, ஜனவரி 5 முதல் தொடங்கவுள்ளதாக மாநில சங்கங்களுக்கு பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

கூடுதல் அவகாசம்... 

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை கடந்த மாதம் வெளியிட்டது பி.சி.சி.ஐ. இதில் ரஞ்சி கோப்பைப் போட்டி நவம்பர் 16-ல் தொடங்கி பிப்ரவரி 19-ல் முடிவடைவதாக அறிவித்தது. இந்நிலையில் ரஞ்சி போட்டிக்குத் தயாராவதற்கு கூடுதல் கால அவகாசம் தேவை என கிரிக்கெட் சங்கங்கள் கோரிக்கை விடுத்ததால் அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ரஞ்சி கோப்பைப் போட்டி ஜனவரி 5 இல் தொடங்கி மார்ச் 20 இல் முடிவடையவுள்ளது.

முஷ்டாக் அலி...

இதனால் அக்டோபர் 20-ல் தொடங்க இருந்த சையத் முஷ்டாக் அலி டி-20 கோப்பைப் போட்டி, அக்டோபர் 27-ல் தொடங்கி, நவம்பர் 22-ல் முடிவடையவுள்ளது. அடுத்த வருடம் பிப்ரவரியில் தொடங்க இருந்த விஜய் ஹசாரே கோப்பைப் போட்டி, டிசம்பர் 1 முதல் 29 தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து