முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள்

சனிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஜமைக்கா : வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தானின் பாபர் அசாம், பவாத் ஆலம் ஜோடி சிறப்பாக ஆடி 150 ரன்களுக்கு மேல் சேர்த்தது. 

மே.இ.தீவு திணறல்...

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் 3 பேர் விரைவில் பெவிலியன் திரும்பினர். இதனால் 2 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் திணறியது. 

அசாம், ஆலம்...

அடுத்து இறங்கிய கேப்டன் பாபர் அசாம், பவாத் ஆலம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர். அணியின் எண்ணிக்கை 168 ஆக இருந்தபோது பாபர் அசாம் 75 ரன்னில் அவுட்டானார். பவாத் ஆலம் 76 ரன்னில் காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். 

212 ரன்கள்... 

முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 74 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது. ரிஸ்வான் 22 ரன்னும், பஹீம் அஷ்ரப் 23 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 2 விக்கெட், சீலஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து