முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனியின் கலக்கல் டான்ஸுடன் ஐ.பி.எல் 2 - ம் பகுதிக்கான புரமோ வீடியோ வெளியீடு

சனிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய் : ஐ.பி.எல். தொடரின் 2-ம் பகுதி அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்கும் நிலையில் பி.சி.சி.ஐ, போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் நிறுவனம், பங்கேற்கும் அணிகள் தயாராகி வருகின்றன. தல டோனி டான்ஸுடன் ஐ.பி.எல். 2-ம் பகுதிக்கான கலக்கல் புரமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா... 

ஐ.பி.எல். 2021 சீசன் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி தொடங்கியது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை உச்சத்தை அடைந்து வந்த நிலையிலும் கடுமையான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி பி.சி.சி.ஐ. வெற்றிகரமாக போட்டியை நடத்தியது.

ஒத்திவைப்பு...

முதல்கட்ட போட்டிகள் சென்னை, மும்பையில் நடைபெற்றது. அதன்பின் 2-ம் கட்ட போட்டிகள் குஜராத், டெல்லியில் நடத்தப்பட்டன. அப்போது பாதுகாப்பு வளையத்தை தாண்டி வீரர்களை கொரோனா வைரஸ் தொற்று தாக்கியது. இதனால் மே 2-ந்தேதிக்குப்பின் போட்டிகள் நடத்தப்படவில்லை. அதன்பின் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

பயிற்சியில் சி.எஸ்.கே...

பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை நடத்தப்படும் என பி.சி.சி.ஐ அறிவித்தது. போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

புரமோ வீடியோ... 

ஐ.பிஎல். போட்டிக்கான ஆர்வத்தை தூண்ட  ஸ்டார் நிறுவனம் அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக முதலில் டோனியை வைத்து ஒரு அசத்தலான புரமோவை உருவாக்கி அதை வெளியிட்டிருக்கிறார்கள். கலரிங் செய்த சிகை அலங்காரம், ஜொலிக்கும் சட்டையுடன் எம்.எஸ். டோனி போடும் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐ.பி.எல். அதிகாரப்பூர்வ டுவிட்டர் இணைய தளம் வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!