முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தன்னை அச்சுறுத்திய 2 பேட்ஸ்மேன்கள்: ரகசியம் உடைத்த முத்தையா முரளிதரன்

சனிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கொழும்பு : 2011 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் யுவராஜ் சிங்குக்கு பதிலாக டோனி முன்னதாக களமிறங்கியது குறித்து இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முரளிதரன் விளக்கமளித்துள்ளார். அதேபோல், தன்னை அச்சுறுத்திய இரண்டு பேட்ஸ்மேன்கள் குறித்தும் சுவாரஸ்ய தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மறக்க முடியாது...

2011 உலகக் கோப்பை இறுதி ஆட்டம் இந்தியா - இலங்கை அணிகள் இடையே மும்பையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் விராட் கோலி அவுட்டான பின்பு யுவராஜ் சிங்தான் களமிறங்கி இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு பதிலாக டோனி களமிறங்கி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து இமாலய சிக்ஸரை விளாசி உலகக் கோப்பையை இந்தியாவின் வசமாக்கினார். அதனை இப்போது வரை எந்தவொரு இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாது.

சமாளிக்கதான்...

டோனி இறுதிப் போட்டியில் முன்னதாக ஏன் களமிறங்கினார் என்பது குறித்து "ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ" இணையதளத்தில் பேசியுள்ளார் முரளிதரன். அதில் "நானும் டோனியும் சென்னை அணிக்காக ஐ.பி.எல்லில் விளையாடி வந்தோம். அப்போது வலைப் பயிற்சியின் போது டோனிக்கு நான் பவுலிங் செய்வேன். ஆனால் யுவராஜ் சிங்குக்கு என்னுடைய சுழற்பந்துவீச்சு எப்படிப்பட்டது என்பது பற்றி தெரியாது. பேட்டிங் வரிசையின்படி யுவராஜ் தான் களமிறங்கி இருக்க வேண்டும். ஆனால் என் சுழற்பந்துவீச்சை சமாளிக்கதான் அவருக்கு பதிலாக டோனி களமிறங்கினார் என நினைக்கிறேன்" என்றார்.

சச்சின் - டிராவிட்...

மேலும் பேசிய அவர் "சச்சின் டெண்டுல்கர் என் சுழற்பந்துவீச்சை சாதாரணமாக கணித்து விளையாடி விடுவார். ஆனால் ராகுல் டிராவிடால் அந்தளவுக்கு கணிக்க முடிந்ததில்லை. மேலும் விவிஎஸ் லட்சுமண் மற்றும் கவுதம் காம்பீரும் என்னுடைய தூஸ்ராவை அற்புதமாக விளையாடுவார்கள்.

சேவாக் -  லாரா...

என்னுடைய கிரிக்கெட் கேரியரில் என்னை அச்சறுத்திய இரண்டு பேட்ஸ்மேன்கள் சேவாக், லாரா. சேவாக் எல்லா நேரங்களிலும் கணித்து விளையாடியவாறு எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் அச்சமின்றி எல்லோருடைய பந்துகளையும் அடித்து விளையாடுவார். 99 ரன்களில் இருந்தால் ஒரு ரன் அடித்து சதம் அடிக்க வேண்டும் என்ற எல்லா வீரர்களும் நினைப்பார்கள். 

விளாச நினைப்பார்...

ஆனால் சேவாக் அப்படியல்ல, அந்த நேரத்தில் பவுண்டரி, சிக்ஸர் விளாச நினைப்பார். அப்படிதான் 293 ரன்கள் எடுத்த போட்டியிலும் 300 ரன்கள் எட்ட வேண்டும் என்பதை மனதில் நினைக்காமல் அடித்து விளையாட முற்பட்டு ஆட்டமிழந்தார். அவர் களத்தில் இரண்டு மணி நேரம் இருந்தால் 150 ரன்கள் விளாசிவிடுவார்கள். ஒருநாள் போட்டியில் அவர் முழுதான் விளையாடினால் அணி நிச்சயம் 300 ரன்கள் கடந்துவிடும்" என்றார் முத்தையா முரளிதரன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!