முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக டேபிள் டென்னிஸ்: மனிகா பத்ரா - சத்யன் ஜோடி ‘சாம்பியன்’

சனிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புடாபெஸ்ட் : உலக டேபிள் டென்னிஸ் போட்டி கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனிகா பத்ரா - சத்யன் ஜோடி ‘சாம்பியன்’ பட்டம் வென்றுள்ளது.

இறுதிபோட்டி...

உலக டேபிள் டென்னிஸ் போட்டி (குறைந்த தரவரிசை கொண்டவர்களுக்கானது) ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்தது. இதில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிபோட்டியில் இந்தியாவின் மனிகா பத்ரா-சத்யன் ஜோடி 11-9, 9-11, 12-10, 11-6 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் டோரா மதராஸ்-நந்துர் எசேகி இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

முதல் இந்தியர்... 

2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு பிறகு முதல்முறையாக இணைந்து ஆடிய மனிகா பத்ரா, சத்யன் ஜோடி இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளது. ‘மிகச் சிறிய கால பயிற்சியில் இருவரும் கூட்டாக இந்த பட்டத்தை வென்று இருப்பது சிறப்பானதாகும். 

சிறந்த யுக்தி...

இது, ஒரு இணையாக எங்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை காட்டுகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் ஈடுகொடுக்கும் வகையில் சிறப்பான யுக்தியுடன் செயல்பட்டோம்’ என்று சென்னையை சேர்ந்த சத்யன் தெரிவித்தார்.

ஒற்றையர் பிரிவில்...

பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா 10-12, 9-11, 10-12, 8-11 என்ற செட் கணக்கில் ஐரோப்பிய யூத் சாம்பியனான எலிசபெத் அப்ராமியானிடம் (ரஷியா) வீழ்ந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!