முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு 15 பதக்கம்?

சனிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் 24ம் தேதி பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடங்குகிறது. இதில் இந்தியாவில் இருந்து 54 பாரா தடகள வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், படகு போட்டி, துப்பாக்கிச்சுடுதல், நீச்சல், பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ், தேக்வாண்டோ உள்ளிட்ட 9 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய குழுவுக்கு செஃப் டி மிஷனாகவும் உள்ள குர்ஷரன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டோக்கியோ பாராலிம்பிக்ஸ் எங்களது சிறப்பாக போட்டியாக இருக்கும் எனநான் நம்புகிறேன். எங்களது பாராதடகள வீரர்கள் கடந்த சில ஆண்டுகளாக கடினமாக உழைத்து சர்வதேசபோட்டிகளில் சிறந்த திறனை வெளிப்படுத்தி உள்ளனர். பாராலிம்பிக்ஸில் பங்கேற்க அவர்கள் துடிப்புடன் உள்ளனர். 5 தங்கம் உட்பட 15 பதக்கங்களை எதிர்பார்க்கிறோம் என்றார்.

------------

ஆர்.சி.பி அணியில் ஹசரங்கா

கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2021 சீசனின் எஞ்சியுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ல் துவங்கி அக்டோபர் 15 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாட இலங்கையின் வனிந்து ஹசரங்கா ஒப்பந்தமாகி உள்ளார். 

சுழற்பந்து வீச்சாளர் ஆடம் சாம்பாவுக்கு மாற்று வீரராக அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக ஆர்.சி.பி தெரிவித்துள்ளது. ஹசரங்கா சிறப்பாக சுழற்பந்து வீசக்கூடியவர். பேட்டிங்கிலும் லோயர் ஆர்டரில் அவர் பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் மட்டும் அல்லது அந்த அணியில் மேலும் இரண்டு வீரர்கள் மாற்று வீரர்களாக இணைந்துள்ளதாக ஆர்.சி. பி தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து