முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத் நகரில் கிரிக்கெட் வீரர் சிராஜூக்கு வானுயர கட் - அவுட்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஐதராபாத்: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜூக்கு வானுயர கட்-அவுட் ஐதராபாத் நகரில் வைக்கப்பட்டுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார் அவர். அதனை கொண்டாடும் விதமாக அவருக்கு கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. 

கொண்டாட்டம்... 

சிராஜ், ஐதராபாத் நகரை சேர்ந்தவர். விக்கெட் வீழ்த்தினால் ‘கப்-சிப் என அமைதியாக இருக்க வேண்டும்’ என்பதை வெளிப்படுத்தும் விதமாக தனது உதடுகளின் மீது விரலை வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவார். அது அவரது டிரெட் மார்க் கொண்டாட்டம்.  

சிராஜின் ரிப்ளை...

“அது என்னால் முடியாது என சொல்பவர்களுக்கு நான் கொடுக்கும் சிக்னல். அப்படி செல்பவர்களிடம் நான் எதுவும் பேச மாட்டேன். எனது ஆட்டத்தின் மூலம் விக்கெட் வீழ்த்தும்போது அப்படி செய்வேன். அது நான் அவர்களுக்கு கொடுக்கும் ரிப்ளை” என ஆட்டத்திற்கு பிறகு தெரிவித்திருந்தார் சிராஜ். 

முழு கட்-அவுட்...

இந்நிலையில் அவரது டிரெட் மார்க் கொண்டாட்டத்தை கட்-அவுட்டாக ஐதராபாத் நகர வீதியில் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அவரது அக்கம் பக்கத்து ஐதராபாத் நண்பர்கள்.  மொத்தமாக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் சிராஜ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!