முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் விவேக் மரணம் குறித்த புகார்: விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்

புதன்கிழமை, 25 ஆகஸ்ட் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

நடிகர் விவேக் ஏப்ரல் மாதம் 17 ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது இந்த திடீர் மரணம், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்தது. இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர்தான் அவர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு மக்களுக்கிடையில் அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். 

மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக், அதற்கு அடுத்த நாள், ஏப்ரல் 17 அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.  

இந்த நிலையில்,  கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியதால் விவேக் மரணமடைந்ததாக தேசிய மனித உரிமை ஆணையத்தில்  விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. 

இதுகுறித்து சரவணன் கூறுகையில், கொரோனா தடுப்பூசியை யார் யார் செலுத்திக் கொள்ள வேண்டும், யாருக்குச் செலுத்தக்கூடாது என்பதை மத்திய, மாநில அரசுகள் வரையறுக்கவில்லை. மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டபின் உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறைகள் குறித்த தெளிவான விளக்கமும் வெளியிடவில்லை.

இதனால்தான் கடந்த ஏப்ரல் 17-ம் தேதியே தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு புகார் அளித்தேன். அதன் படி ஆணையம் புகாரை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. நடிகர் விவேக்கின் மரணத்தை முழுமையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் முன் அனைத்துப் பரிசோதனைகளும் மேற்கொள்ள வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளேன் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து