முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நதியினில் வெள்ளம் - கரையினில் நெருப்பு சட்டசபையில் ஓ.பி.எஸ். பாடிய பாடல்

சனிக்கிழமை, 28 ஆகஸ்ட் 2021      அரசியல்
Image Unavailable

நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு, இதுதான் என் நிலை என்று கண்ணதாசன் பாடல் வரிகளைக் குறிப்பிட்டு சட்டசபையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார். 

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, தமிழக சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். 

இந்நிலையில், இத்தீர்மானம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர் செல்வம், 

வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசிக்க முதல்வர், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அவசரக் கோலத்தில் எதிர்க்கக் கூடாது. மத்திய அரசின் பார்வைக்கு விவசாயிகளின் கோரிக்கைகளைக் கொண்டு செல்ல வேண்டும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருப்பதால் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றார்.

அப்போது, நீர்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன், வேளாண் சட்டங்களின் பாதகங்கள் குறித்து குழந்தைக்குக் கூடத் தெரியும். ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினார்.

பின், தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க. அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது. பின்னர், அ.தி.மு.க.வினர் மீண்டும் அவைக்கு வந்த போது, தான் கூறியது ஓ.பி.எஸ் மனதைத் தனிப்பட்ட வகையில் புண்படுத்தியிருந்தால், தன் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்குமாறு துரைமுருகன் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.

அப்போது, ஓ.பி.எஸ், துரைமுருகன் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை இருப்பதாகக் கூறினார். மேலும், தன்னுடைய நிலையை எண்ணும் போது, நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு, இதுதான் என் நிலை என்ற கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வருவதாக ஓ.பி.எஸ். தெரிவித்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த தேனும் பாலும் என்ற படத்தில் வெளியான பாடல்தான் நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு என்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து