முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சலார்' படத்தில் ஜெகபதி பாபு

சனிக்கிழமை, 28 ஆகஸ்ட் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ஹோம்பாலே பிலிம்ஸ் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கும் 'சலார்' படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் ஜெகபதி பாபு ஏற்றிருக்கும் ராஜமன்னார் என்ற கதாபாத்திரத்தின் போஸ்டரை அப்பட நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

'கே ஜி எஃப் சாப்டர் ஒன்' மற்றும் 'கே ஜி எஃப் சாப்டர் 2' ஆகிய படங்களின்  தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் 'சலார்'. நடிகர் பிரபாஸ், நடிகை சுருதிஹாசன் நடிப்பில் ஆக்சன் அட்வென்ச்சர் திரைப்படமாக 'சலார்' உருவாகிறது.

இதில் தெலுங்கின் முன்னணி நடிகரான ஜெகபதிபாபு 'ராஜமன்னார்' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரின் மிரட்டலான லுக், போஸ்டராக வெளியிடப்பட்டிருக்கிறது. 'சலார்' படத்தில் இடம்பெறும் ராஜமன்னார் கதாபாத்திரம், கதையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

இப்படத்தின் 20 சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பதாகவும், மீதமுள்ள படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும்'என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து