முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம் : நீண்ட வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனம்

திங்கட்கிழமை, 30 ஆகஸ்ட் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : நாடு முழுவதும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி குருவாயூர் கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணர் அவதரித்த அற்புத நாள் கிருஷ்ண ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான இந்த புனித நாளில் விரதம் இருந்து கிருஷ்ணருக்கு அபிஷேகம், அலங்காரம், நெய்வேத்தியம் படைத்து, பாடல்களை பாடி அவரின் அருளை பெறுவர். 

அதன்படி நாடு முழுவதும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாப்பட்டது. வட மாநிலங்களில் உள்ள கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசிதிப்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நேற்று காலை முதலே சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.  இதில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் திருச்சியில் குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து வந்து கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடைபெற்றது. பேதைப் பருவத்தில் இருக்கும் கிருஷ்ணரை மங்கைகள் கொஞ்சுவது போல் நடித்து காட்டி,கண்ணன் ராதை வேடமணிந்து குழந்தைகள் பாட்டு பாடி,நடனமாடி கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து