முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமண மண்டபங்களை குத்தகைக்கு விட ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் முடிவு

செவ்வாய்க்கிழமை, 31 ஆகஸ்ட் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருப்பதி : திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் 299 திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் 177 திருமண மண்டபங்கள் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ளன. ஆனால், கோடிக்கணக்கில் செலவு செய்து திருமண மண்டபங்கள் கட்டினாலும் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால், இதுகுறித்து தேவஸ்தானம், விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டது.

இவர்கள் கொடுத்த அறிக்கை தேவஸ்தான அதிகாரிகளை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சில திருமண மண்டபங்களில் அவ்வூர் மக்கள் மாடுகளை கட்டி அவைகளை மாட்டுக் கொட்டகைகளாக மாற்றி விட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள 177 தேவஸ்தான திருமண மண்டபங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால், இதற்கு முந்தைய அறங்காவலரான புட்டா சுதாகர் யாதவ் தலைமையில் நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில், இனி திருமண மண்டபங்களே கட்டக் கூடாது என தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து